×

பொன்னமராவதியில் மாஸ்க் அணியாமல் வாகனத்தில் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம்: அதிகாரிகள் அதிரடி

பொன்னமராவதி: பொன்னமராவதியில் மாஸ்க் அணியாமல் வாகனத்தில் சென்றவர;களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்பட்டது.பொன்னமராவதி வட்ட சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து பேருந்துநிலையம் எதிரே மாஸ்க் அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டிவந்த வாகன ஒட்டிகளுக்கு ரூ200 அபராதம் விதித்து கொரோனா கட்டுப்பாடுகளை அறிவுறுத்தினர். பேருந்துகளில் 50 சதவீதத்திற்கு மேல் பயணிகளை ஏற்றக்கூடாது. மாஸ்க் அணியாமல் பேருந்துகளில் பயணிக்க கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பொன்னமராவதி பேருந்துநிலையம், சந்தைப்பகுதி, கடைவீதி, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணிநாகராஜன் தலைமையில் தாசில்தார் ஜெயபாரதி முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், உத்தமன்,ரவீந்திரன் மற்றும் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த் துறை,பேரூராட்சி ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கொரோனோ முன்தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். இதே போல கொப்பனாபட்டியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு முக கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தப்பட்டது….

The post பொன்னமராவதியில் மாஸ்க் அணியாமல் வாகனத்தில் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம்: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Bonnamarawadi ,Ponnamarawati ,Circular Health Department ,Revenue ,Authorities Action ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சார்ச்சனை விழா